பகுதி 1
1.தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் (ICT)என்பதனை வரையறைசெய்க.
2.இலத்திரனியல் கற்கைமுறைமை (e-Learning) என்பதனால் நீர் விளங்கிக்கொள்வது யாது?
3.தரவின் வகைகளைக் குறிப்பிட்டு அவைஒவ்வொன்றுக்கும் உதாரணம் தருக.
4. இக்கருவியின் பெயர் யாது?
5.சாள்ஸ் பபேஜ் இன் எப்படைப்பானது கணினி உருவாவதற்குக் காரணமாயிற்று?
6.முதல் கணினி நிகழ்ச்சித்திட்ட நுட்பவியலாளர் எனக்கருதப்படுபவர் யார்?
7. வலைக் கமரா(Web Camera) ஆனது உள்ளீட்டுக்கருவியா?வெளியீட்டுக்கருவியா?
8. ALU என்பதன் விவாக்கத்தினை ஆங்கிலத்திலும் தமிழிலும் தருக.
9.மைய முறைவழி அலகுகளை (Processors) உற்பத்தி செய்யும் பிரதான நிறுவனங்கள் 2 தருக.
10. படத்தில் காட்டப்பட்ட Port இன் பணி யாது?
11.சமாந்தரக் குதை(Parallel Port) பயன்படுத்தப்படும் கருவிகள் 2 தருக.
12. USB2.0 Port இன் தரவுகள் கடத்தப்படும் வேகம் யாது?
13.கணினி நினைவகத்தினை(Memory) பிரதானமாக எத்தனை வகையாகப் பாகுபடுத்தலாம்? ஆவை எவை?
14. 2DC என்ற பதினறும எண்ணை தசம எண்ணாக மாற்றுக.
15. ASCII என்பதன் விரிவாக்கத்தைத் தருக.
16. B யின் ASCII பெறுமதி 66 எனில் அதன் இருமப் பெறுமதி யாது?
17. படத்தில் காட்டப்பட்டிருப்பது யாது?
18.எண் முறைமைகள் பயன்படுத்தப்படும் சந்தர்பங்கள் 4 குறிப்பிடுக.
19..அட்சரகணித கோவை,அட்சரகணித சமன்பாடு ஆகிய ஒவ்வொன்றுக்கும் உதாரணம் தருக
20.F=(A+B)AB என்ற Boolean கோவைக்கான தர்க்கப்படலையைத் தருக.
(20*2=40புள்ளிகள்)
பகுதி 2
1 தகவலின் முக்கியத்துவமாகக் கருதக்கூடிய அமசங்கள் 5 தருக. 2.கணினிகளை அவற்றின் சந்ததி அடிப்படையில் வகைப்படுத்துக.
3.கணினியின் பணிகளைப் பட்டியற்படுத்துக.
4.கணினித்திரை(Monitor) வகைப்பாடுகளைத் தந்து அவை ஒவ்வொன்றிற்கும் 4 பண்புகள் கூறுக.
5.அச்சுப் பொறிகளின்(Printers) வகைப்பாடுகளைத் தந்து அவற்றில் ஒன்றை விளக்குக.
6.தரவு ஊடுகடத்தல் விதங்கள்(Data Transmission Mode) வகைகளைக் குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றிற்கும் உதாரணம் தருக.
7.கணினி வலைப்பின்னல் இடத்தியல் அமைப்பின்(Computer Network Topology)வகைகளைக் குறிப்பிட்டு அவற்றுள் ஒன்றினை விளக்குக.
8.பிரதான தர்க்கப்படலைகளைக்(Logic Gates) குறிப்பிட்டு அவற்றின் உண்மை அட்டவணைகளையும்(Truth Tables) தருக.
9.கணினிச் செயன்முறையை வரைபடத்துடன் விளக்குக.
10. Blue tooth தொழிநுட்பம் பற்றிச் சிறுகுறிப்பு எழுதுக.
(10*6=60புள்ளிகள்)